Archive for May, 2015

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரம்பரைத் தர்மகர்த்தா திரு.முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் நம்பிக்கைச்சொத்து வழக்கு ரீஆர்/54, ரீஆர்/105, ரீஆர்/143, ரீஆர்/163, என்று பல வழக்குகள் நடைபெற்றதை யாவருமறிவர். இவ்வழக்குகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் அலங்காரத் திருவிழா உபயகாரர்களில் ஐந்து போர் மேற்படி ஆலய பரம்பரைத் தர்மகர்த்தாவுக்கு எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் நம்பிக்கைச் சொத்து வழக்கு ரீஆர்.171 ஐ பதிவு செய்திருந்தனர்.இவ்வாலயம் 1845ல் பதிவுசெய்யப்பட்ட மிகப்பழமை வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகும்.. இவ் ஆலயம் தனியார் காணியில் அமைந்துள்ளது. 2000ம் ஆண்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் காரணமாக இவ்வாயலம் உள்ளிட்ட பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் நாகர்கோவில் கிராமத்தில் உள்ள எந்தவொரு ஆலயங்களிலும் பூசைவழிபாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும் இவ்வாலய பரம்பரைத் தர்மகர்தாவின் விடாமுயற்சியினால் 2009 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதல் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் மற்றும் அருகாமையில் அமைந்துள்ள நாகர்கோவில் அருள்மிகு பூர்வீக கண்ணகை அம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கு இராணுவ பாதுகப்புடன் சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாலயப் புனர்நிர்மாணப் பணிகளை உடன் ஆரம்பிக்க வேண்டியிருந்தமையினால் ஆலய பரம்பரைத் தர்மகர்த்தாவின் வேண்டுகோளுக்கமைய வடமராட்சி கிழக்கு பிரதே செயலாளரின் தலைமையில் நாகர்கோவில் கிராம மக்களில் இருந்து ஒரு இடைக்கால,ஆலய பரிபாலன சபை தெரிவுசெய்யப்பட்டு,ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று04.06.2012ல் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்வாலய இடைக்கால சபை நிர்வாகத்திற்கு எதிராக இவ்வூர் மக்கள் நால்வரினால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் நம்பிக்கைச் சொத்து/163 வழக்கு பதிவுசெய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்தது. பின்னர் மனுதாரர்களினால் இவ் வழக்கு மீளப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ் ஆலயத்தின் நலன்கருதி நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழா உபயகாரர் ஐந்துபோர் இவ்வலய பரம்பரைத் தர்மகர்த்தா
திரு.முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு எதிராக ரீஆர்.105 முகாமைத்திட்டத்தில் உள்ளகுறைபாடுகளை சுட்டிக்காட்டி காலத்திற்கேற்றவாறு முகாமைத்திட்டம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு மன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர். மன்றின் அனுமதிக்கமைய மனுதாரர்களின் சட்டத்தரணியால் புதிய முகாமைத்திட்டம் ஒன்று மன்றிற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. ஏதிர்மனுதாரரின் சட்டத்தரணி முகாமைத்திட்டத்தில் சிலமாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்று கோரியிருந்தார். அம்மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்பிரகாரம் இந்த ஆலய சகல நடவடிக்கைகளும் நடைபெற வேண்டுமென்பதே மனுதாரர்களின் கோரிக்கையெனக் கூறியிருந்தனர். இதனை எதிர்மனுதாரரும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.13.07.2014ல் விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முகாமைத்திட்டம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து இதன்படி குறித்தமுகாமைத் திட்டத்தி;ற்கு அமைய இணங்கியுள்ளதாக மன்றிற்கு தெரிவித்தனர்.

இதற்கமைய இணக்கத்தீர்வு பதியப்பட்டு இருதரப்பினரும் 09.12.2014ல் வழக்கேட்டில் ஒப்பமிட்டு இணக்கத் தீர்வை ஏற்றுக்கொண்டனர்

Untitled-1

Untitled-2

Untitled-3

Untitled-4

001

Untitled-6

Untitled-5

Untitled-7

Untitled-8

Untitled-9

002

Untitled-10

Untitled-11