www.nagarkovilnagam.comஎன்னும் இணையத்தளம் நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையின் பொங்கல் பரிசாக 15.01.2011 அன்று செயல் நிலைக்கு வருகின்றது என்பதை அன்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நீதிமன்ற ஆணையினைப்பெற்று 20.12.2010 வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் சட்டபூர்வமாக தெரிவுசெய்யப்பட்டதே தற்போதைய சபையாகும்.

1. பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும் நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கட்டடப் பணிகளைப் பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் இச்சபையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

2. இக்கட்டிடத்திற்கான நிதியினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேகரிக்கும் சட்டபூர்வமான பரிபாலன சபை இதுவாகும்.

3. இப்பரிபாலன சபை செயற்படும் காலம் மூன்று வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. இக்கால எல்லைக்குள் மகாசபைக்கான அங்கத்தவர்களைச் சேர்த்து புதிய நிர்வாக சபையொன்றினை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல். இச்சபையின் முக்கிய பணிகளில் மற்றொன்றாகும்.

இச்சபையின் நிர்வாக அமைப்பு வருமாறு.

திரு.சி.இராஜறஞ்சன் (தலைவர், பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளர்)
திரு.த.குருபரன் (செயலாளர்)
திரு.வ.பத்மநாதன் (பொருளாளர்)

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

திரு.அ.அ.நடராஜா
திரு.த.பரஞ்சோதி
திரு.வே.சிதம்பரநாதன்
திரு.ச.ஆரணன்

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்திற்கான நிதியினைச் சேகரிக்கும் சட்டபூர்வமான உரிமை 20.12.2010 இல் தெரிவு செய்யப்பட்ட நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபைக்கு மட்டுமே உரித்தாகும்.

எமது சபையின் யாப்பு இங்கே  தரவிறக்கம் செய்யப்படலாம்.

நிர்வாகம்
13-1-2011